About

குறிப்புகள்

சத்யானந்தன்
கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன் (முரளிதரன் பார்த்தசாரதி) இருபத்தோரு ஆண்டுகளுக்கும் மேலாக காலச்சுவடு, தீராநதி, சதங்கை, கணையாழி, நவீனவிருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, சங்கு, புதியகோடாங்கி,இலக்கியச் சிறகு, கனவு உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணையதளங்களிலும் தீவிரமாகத் தனது படைப்புகளைப் பிரசுரித்துள்ளார். நவீன புனைகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைப்பவர். 2019ல் வெளியான காலச்சுவடின் ‘தாடங்கம்’ சிறுகதைத் தொகுதி உருவம் மற்றும் உள்ளடக்கத்தில் புதிய தடங்களைக் கண்டதற்காக கவனம் பெற்றது. வாசிப்பையும் எழுத்தையும் இருகரைகளாகக் கொண்டு சமகால எழுத்துக்களை அலுக்காமல், சளைக்காமல், அமைதியாக தன் போக்கில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி, விமர்சித்து, கவனப்படுத்தி வருகிறார்.
பிரசுரமாகியுள்ள நூல்கள்
1. கைப்பைக்குள் கமண்டலம் – கவிதைகள் (2019)
2. குதிரை ஏறும் காதல் – கவிதைகள்(2019)
3. வெளியே வீடு – கவிதைகள்
4. தாடங்கம் – சிறுகதைகள்
5. தோல் பை – சிறுகதைகள்
6. விக்கிரகம் – நாவல்
7. முள்வெளி- நாவல்
8. போதி மரம் – நாவல்
9. புருஷார்த்தம்- நாவல்
10. கரடி பொம்மையை எடுத்தது யார்? – சிறார் நாவல்
11. துறவி- (மொழிபெயர்ப்பு) நாவல்
12. நான் ஏன் இந்துவாக இருக்கிறேன் -மொழிபெயர்ப்பு
விருதுகள் / பரிசுகள் / பெருமைகள்

1. சரவணன் மாணிக்க வாசகனின் நூறு நூல்கள் பட்டியலில் ‘தாடங்கம்’
நேர்காணல்கள்
1. படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக

2 Responses to About

  1. Manju Nath says:

    sir Kindly share me your mail ID

Leave a comment