வாடாத நீலத் தாமரைகள் சிறுகதைத் தொகுதி- கருணாமூர்த்தி விமர்சனம்


வாசிப்போம்- தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ முக நூல் குழுவில் ‘வாடாத நீலத் தாமரைகள்’ சிறுகதைத் தொகுதியை ஆழ்ந்து வாசித்து விமர்சித்த கருணாமூர்த்திக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

‘வாடாத நீலத்தாமரைகள்.” சத்யானந்தன் அவர்கள் எழுதி,

எழுத்து பதிப்பகம் வெளியீடு முதற்பதிப்பு 2021

விலை ரூபாய் 230 /- மொத்த பக்கங்கள் 185..

வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழுவில் மே மாதத்தில் அதிகமாக பதிவிட்டமைக்கு சத்யானந்தன் அவர்களால் பரிசாக வழங்கப்பட்ட புத்தகத்திற்கு நன்றி முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.####₹₹₹

சத்யானந்தன் அவர்கள் ஒரு மிகச் சிறந்த கவிஞர். முரளிதரன் பார்த்தசாரதி என்கிற சத்யானந்தன் 21 ஆண்டுகளுக்கு மேலாக காலச்சுவடு, தீராநதி ,சதங்கை ,கணையாழி ,நவீன விருட்சம் ,சங்கு, உயிர்மை,மணிமுத்தாறு சங்கு, புதிய கோடாங்கி ,இலக்கியச் சிறகு, கனவு உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும் , திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணைய தளங்களிலும் தீவிரமாக தனது படைப்புகளை பிரசுரித்துள்ளார் . நவீன புனைகதைகள் நாவல்கள் கவிதைகள் கட்டுரைகளையெல்லாம் வித்தியாசமாக படைப்பதில் வல்லவர் . 2019 இல் வெளியான காலச்சுவடின் *தாடங்கம்* சிறுகதைத் தொகுதி உருவம் மற்றும் உள்ளடக்கத்தில் புதிய தடங்களை கண்டதற்காக கவனம் பெற்றது . வாசிப்பையும் எழுத்தையும் இரு கரங்களாக கொண்டு சமகால எழுத்துக்களை அலுக்காமல் சளைக்காமல் அமைதியாக தன் போக்கில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி விமரிசித்து கவனப்படுத்தி வருகிறார் சத்யானந்தன் அவர்கள்.###

சரவணன் மாணிக்கவாசகம் அவர்கள் தனது முன்னுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார் . “சத்யானந்தன் சொல்ல விரும்பும் கருத்தை விளக்கமாகச் சொல்லிக் கொண்டு போவது இல்லை .வாசகர்களையும் உடன் பயணித்து கதைகளை விரிவாக்கி கொள்ளச் செய்கிறார் .வழக்கமான ஜனரஞ்சக கதைகளில் இருந்து மாறுபட்ட வாசிப்பனுபவத்தை தரும் சத்யானந்தன் கதைகள்,” என்கிறார் தனது முன்னுரையில் சரவணன் மாணிக்கவாசகம் அவர்கள்..#####

இந்த புத்தகத்தில் மொத்தம் 19 சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளது.​சில கடிகாரங்கள் .​

நிறம் மாறும் நேர்வு .

​1/2.​

ஒரு பிளேட் தயிர்சாதம் .

​மேய்ப்பன் .​

சாதனம் .​

கல உமி.

​புழக்கம் .

​கச்சிதம்.​

மடக்கு மேசை.​

நந்தி . ​

குயில்கள் கரையும் காலம் ​

மோகினியின் வளையல்கள் .​

சாத்தான் காற்று .

​வாடாத நீலத்தாமரைகள்.​

தப்புதான்.​

திருமால்பூர் எக்ஸ்பிரஸ் . ​

சூஹா ஜால்

​பெயர் இல்லாதவன் என்று மொத்தம் 19 கதைகள் ஒவ்வொன்றும் முத்துக்கள் ஆக சத்யானந்தன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.#####₹₹₹

வாடாத நீலத்தாமரைகள்:​ இந்த தலைப்பை குறித்து சற்று நேரம் சிந்தித்துக் கொண்டு கொண்டிருந்தேன் . தாமரைகள் குறித்து நினைத்துக் கொண்டிருக்கும் போது இது குறித்து ஒரு புத்தகமே எழுதப்பட்டிருந்தது .தாமரையின் குணங்கள், யாரெல்லாம் அதை உச்சரிக்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்க முடிந்ததே தவிர ஆசிரியர் எண்ணத்தில் உதித்த அந்த கரு எனக்கு தட்டுப்படவே இல்லை படிக்கும் வரை. மனைவி சற்று உடல்நலம் குன்றி இருக்கவே அவளை நன்கு கவனித்துக் கொள்ள சொல்லி எனது முகநூல் தோழி அறிவுரை வழங்கினார் .பெண் மனது பெண் தானே அறியும் . புத்தகம் படிக்க வேண்டாம் .போன் கையில் எடுக்க வேண்டாம் இன்ன பிற .இப்படி அருகில் இருந்து எல்லா உதவிகளையும் செய்து கொண்டு பேசிக் கொண்டே இருங்கள் ,குணமாகிவிடும் என்று சொன்னார் .எனவே கடந்த மூன்று வாரங்களாக விஜய் டிவி ஒளிபரப்பிய மகாபாரதம் பார்த்துக்கொண்டிருக்கிறேன் . சிகண்டியாக பிறப்பதற்கு முன் , ஈஸ்வரனிடம் யாசி வரம் வாங்கி தன்னை மாய்த்துக் கொண்ட வரையில் சிகண்டி கதை பார்த்தேன் . ஏற்கனவே ஜெயமோகன் எழுதிய சிகண்டி கதை சிகண்டி உருவாவதற்கு முன்னதாக வரையிலான கதையை படித்து இருக்கிறேன் . இப்போது அம்பை முதல் சிகண்டி வரை கதையை *வாடாத நீலத்தாமரை *என்கிற கதை மூலம் அறிந்துகொண்டேன் . தெரிந்த கதை தான் அறிந்த கதைதான் என்றாலும் ஒவ்வொரு ஆசிரியரின் கற்பனை திறத்துக்கும் வார்த்தை வளத்திற்கும் தக்கவாறு நம்மை ஆட்படுத்தி விடும். இந்த கதையை படிக்கும்போது நான் கதறி அழுதுவிட்டேன் .அதுவே அந்த ஆசிரியரின் வெற்றி .என்னை உணர்ச்சி வசப்படுத்த செய்கின்ற வரிகளை ,எழுதியவரை எப்போதுமே நான் நன்றி பாராட்டி கொண்டிருப்பேன் .அந்த வகையில் ஆசிரியருக்கு நன்றி. வாடாத நீலத்தாமரைகள். என்ன ஒரு அருமையான தலைப்பு. அம்பை முருகனை நோக்கி தவமிருந்து பெற்ற மாலை ,இதை அணிந்து கொண்டால் பீஷ்மரை வென்றுவிடலாம் என்று வரம் அளி்க்கிறார் முருகன் .ஆனால் ஆண்கள் தானே போருக்கு செல்ல வேண்டும் .அவரை எதிர்த்து யார் போராடுவார்கள் என்று குழம்பிப் போக, அம்பை ஈசனிடம் வரம் கேட்கிறாள் . வரம் தரவே மறுபிறவி எடுக்க வேண்டி தற்கொலை செய்து கொள்கிறாள் .பாஞ்சால மகாராணிக்கு மகளாகப் பிறக்கிறாள்.பீஷ்மருக்கு எதிராக தேரோட்டி செலுத்திய நிலையில் பீஷ்மர் மீது அம்பு மழை பொழிய படுகிறது .சிகண்டி அடிபட்டு விழுகிறாள். மருத்துவர் காயங்களைத் துடைத்து கட்டு போட்டபடி இருந்தார். ரத்தம் கட்டுப்படுத்த இயலாமல் வழிந்துகொண்டிருந்தது .விவரம் அறிந்த கிருஷ்ணர் ஓடி வருகிறார் .மிகவும் சிரமத்துடன் வலது கையை அசைத்து அருகே வா என்றாள் சிகண்டி . அருகே சென்று அமர்ந்து அவள் தலைமீது தடவிக் கொடுத்தார். “என்னை மடியில் வைத்துக் கொள்ளுங்கள் வாசுதேவா “மெல்லிய குரலில் இரங்கினாள் .”மகளே என ஒருமுறை அழையுங்கள் கிருஷ்ணா ” என்கிறாள் சிகண்டி . “மகளே “என்று சொல்லி முடிக்கும் முன் அவர் குரல் கம்மி அவர் கண்களில் நீர் வழிந்தது.மூச்சு திணறிக் கொண்டிருந்தது. பேச சிரமப்பட்டாள் . “வரலாறு ஆண்பால் பெண்பால் அல்லது மூன்றாம் பால் பேதமற்றது தானே கிருஷ்ணா “,என்கிறாள் . கிருஷ்ணரால் பேச பதில் கூற இயலவில்லை . இந்த இடத்தில்தான் நான் கண்ணீர் சோர நின்று விட்டேன்.. பெண்ணால் முடியும் ,பெண் தன்மை உள்ள எதனாலும் முடியும் என்பதை ஆசிரியர் வலியுறுத்திக் கூறிவிட்டார் என்று என்றே நான் நினைக்கிறேன். பெண்களைக் குறித்து அவர்களின் உளவியல் கோட்பாடுகளை மிகவும் நுண்ணியமாக ஆராய்ந்து அறிந்து உள்ளார் ஆசிரியர் என்பது இவரின் மற்ற கதைகளை பார்க்கும்போது படிக்கும்போது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.#####

2)1/2.இந்த தலைப்பு குறித்து கூட நானும் வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தேன் .பைத்தியம் , அரை கிருக்கு என்று அழைக்கின்றோம் அல்லது சரிபாதி உலகம் என்றோ என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். கதையை படிக்கும்போதுதான் வேறுவிதமாக அமைந்துவிட்டது புரிகிறது. இந்த கதையில் வரும் கவிதையில் என்னை நான் இழந்து நின்றேன் . ஒரு கடற்கன்னி பாதி இடுப்பு வரை பாதி பெண்ணாகவும் இடுப்புக்கு கீழே மீனாகவும் இருக்கின்ற ஒரு பெண்ணின் கதை இது.அந்தக் கவிதையின் சில வரிகள் :

பெண்ணின் உலகம் பெண்ணால் உலகம்

என்பது மிகையாய் இல்லையா

பெண்ணிடம் இருந்து விடை கிடைக்காத

எண்ணற்ற கேள்விகளுள் சேர்த்துக்கொள்ளலாம் இதையும்.

நீ என்னையும்

நான் உன்னையும் நிறைவு செய்வோம்

என்றெல்லாம் எழிமைப் படுத்தினால்

பூரணம் என்பது அத்தனை மலிந்ததா?தனிநபர் இலக்கில்லையா ?ஒர் ஒட்டுண்ணி இன்னொன்றை

நிறைவைத் தவிர நிறையவே செய்யும் .

படிக்கற்கள் யார் அடிக்கற்கள் யார்

என்பதெல்லாம் வாழ்க்கை சூதாட்டத்தில் வரிசை மாறும்.

பெண்ணின் தனித்துவம் அழுத்தமானது

ஆண் கர்வம் தனித்துக் கொள்வது.#####

நிறம் மாறும் நேர்வு.: ஆட்சி மாற்றம் நடக்கும் போதெல்லாம் அதிகாரிகள் எப்படி எல்லாம் தங்களை மாற்றிக்கொண்டு மந்திரிகளிடத்தில் ஜால்ரா போட்டு தங்களை தக்கவைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை எல்லோரும் அறிந்த விஷயத்தை சரியாக இருக்கிறார் ஆசிரியர். இவரின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாக அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது .இவரை இதுவரை நான் படிக்கவில்லையே என்ற வருத்தம்தான் எனது நெஞ்சில் குடி கொண்டது.

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment