Monthly Archives: January 2018

கலிபோர்னியா – சைக்கிள் ஓட்டிகளுக்குத் தனி இடம் சாலைகளில்


கலிபோர்னியா – சைக்கிள் ஓட்டிகளுக்குத் தனி இடம் சாலைகளில் கலிபோர்னியாவின் சன்னிவேலின் பெரும்பாலான சாலைகள் நம் சென்னையின் சாலைகளைப் போலக் குறுகலானவையே. ‘ப்ரீ வே’ என்னும் வெளிச் சுற்று சாலைகள் விரிந்தவை. நம் ஊரிலும் அதைப் போன்ற சாலைகள் வந்து விட்டன. ஆனால் நாம் சைக்கிள் ஓட்டுபவரை மிரட்டும் போக்குவரத்து முறையைத் தான் தற்போது கை … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

கலிபோர்னியா – அலுங்காமல் தெருக் கூட்டுவார் தொழிலாளி


கலிபோர்னியா – அலுங்காமல் தெருக் கூட்டுவார் தொழிலாளி முதுகில் ஒரு சிறிய இயந்திரம் அது கையிலுள்ள குழாய் வழியாக அழுத்தமான காற்றைப் பீச்சி அடிக்கிறது. அதை வைத்து அவர் நடைபாதைகளை மற்றும் அவற்றை ஒட்டியுள்ள புல் தரைகளை சுத்தம் செய்கிறார். ஒரு பக்கமாகக் காற்றைச் செலுத்திய படியே குப்பைகளை (பெரிதும் சருகுகள் மட்டுமே) ஒரு குவியலாக்குகிறார். … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment

காந்தியடிகள் இருமுறை விஜயம் செய்த நந்தனார் மடம் – தமிழ் ஹிந்து நாளிதழ் கட்டுரை


காந்தியடிகள் இருமுறை விஜயம் செய்த நந்தனார் மடம் – தமிழ் ஹிந்து நாளிதழ் கட்டுரை சுவாமி சகஜானந்தர் என்னும் துறவி நந்தனார் மடம் என்னும் மடத்தை நிறுவி, அதன் கீழ், கல்விக்கான பள்ளிக் கூடத்தை நடத்தினார், சிதம்பரத்தில் உள்ள அந்தப் பள்ளிக்கு, காந்தியடிகள் இருமுறை வந்தார் என்பவற்றை ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ் ஹிந்து நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

கலிபோர்னியா-சுற்றுலா செல்வது இவர்கள் வாழ்க்கை முறை


கலிபோர்னியா-சுற்றுலா செல்வது இவர்கள் வாழ்க்கை முறை நாம் நம் நாட்டில் காணும் ஐரோப்பிய, அமெரிக்க சுற்றுப் பயணிகள் அவர்கள் ஊரில் வருவாய் குறைவானவர்கள். இந்திய சுற்றுலா அதிக செலவில்லை என்பதாலேயே வருகிறார்கள். பெரிதும் மேலை நாடுகளில் வாரக் கடைசி மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது அவர்களது வாழ்க்கை முறை. நீண்ட சாலைப் பயணங்களை … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

கலிபோர்னியா -மரத்தை ஊடுருவும் மின் கம்பிகள்


  கலிபோர்னியா -மரத்தை ஊடுருவும் மின் கம்பிகள் சென்ற முறை வந்த போது எழுதிய பதிவுகளில் குறிப்பிட்டிருந்த படி தலைக்கு மேல் செல்லும் மின் கம்பிகள் எனக்கு வியப்பையே அளிக்கின்றன. சென்னையில் நகரத்தின் எல்லாத் தடங்களிலும் தரைக்குக் கீழேதான் மின் கம்பிகள். இங்கே மின் கம்பிகளின் வழியில் மரம் வந்தால் அதை ஊடுருவிச் செல்லும் படி … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

ஒரு சிறிய சாதனை


ஒரு சிறிய சாதனை நான் தங்கியிருக்கும் என் மகள் வீட்டில் இருந்து மூன்று கிமி சுமார் இருக்கும் சன்னிவேல் நூலகம். நேற்றைக்கு முதல் நாள் அவர் என்னை நடையாய் அழைத்துச் சென்று காட்டினார் என்பது உண்மையே. ஆனாலும் நான் வாஷிங்க்டன் என்னும் சாலை சந்திப்பில் சாலையைக் கடந்து நேர் எதிர்ப்புறம் செல்லாமல், வந்த வழியிலேயே மேற் சென்று விட்டேன். … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , | Leave a comment

வீட்டு வாசலில் ஆரஞ்சு மரம்


வீட்டு வாசலில் ஆரஞ்சு மரம் வீட்டு வாசலில் ஆரஞ்சு மரம் இருப்பதும், அதில் தெருவில் செல்வோர் யாருமே பழம் பறிக்காததும் எனக்கு மிக ஆச்சரியமே. சன்னிவேலில் இது ஒரு அதிசயமாகவே தென்பட்டது. முதல் நாள் நான் அதன் அருகே போகும் போது பல பழங்கள் கீழே உதிர்ந்து கிடந்தன. யாரும் எடுக்கவில்லை. இத்தனைக்கும் வீட்டின் உள்ளே … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , | Leave a comment

கலிபோர்னியா – உபத்திரவமில்லாத கட்டுமானப் பணி


கலிபோர்னியா – உபத்திரவமில்லாத கட்டுமானப் பணி இந்தியாவின் கட்டுமான நிறுவனங்கள் உலகத் தரம் வாய்ந்தவை. ஒரு கட்டிடத்துக்குக் கீழே உருளைகளைக் கொடுத்து, அதை அப்படியே தூக்கி உயரமான இடத்தில் ஏற்றி நிற்க வைக்கும் திறமை உலகில் எத்தனை நாடுகளில் உண்டு என்பது ஐயமே. பல கட்டிடங்கள் இந்தியாவில் நூறு வயதிலும் தாக்குப் பிடிப்பவை. இன்று கட்டிடக் … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , | 1 Comment

கலிபோர்னியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மர்ஃபி அவென்யூ


கலிபோர்னியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மர்ஃபி அவென்யூ நேற்று நடைப் பயிற்சிக்கு மகளும் என்னுடன் வந்திருந்தார். அப்போது இது வரலாற்றுச் சிறப்பு மிக்க சாலை என மர்ஃபி அவென்யூவைக் காட்டினார். 1842ல் Martin Murphy Jr. என்பவர் 23 சதுர மைல் உள்ள இந்த இடத்தை வாங்கி, கோதுமை வயல், பழத் தோட்டங்கள் எனப் பலவற்றையும் … Continue reading

Posted in காணொளி, நாட் குறிப்பு | Tagged , , , , | 1 Comment

கலிபோர்னியா – மர வீடுகளை முடுக்குகிறார்கள்


  கலிபோர்னியா – மர வீடுகளை முடுக்குகிறார்கள் சென்ற முறை நான் முதன் முதலாக அமெரிக்காவில் தங்கினேன். எனக்கு மார்த்தாலேயே வீட்டுகள் என்பது வியப்பாகவே இருந்தது. உண்மையில் அதை எப்படிக் கட்டுகிறார்கள் என்பது பற்றி என் கற்பனை வளத்தையே பயன்படுத்திக் கொண்டிருந்தேன். இன்று காலை நடைப் பயிற்சிக்காகச் செல்லும் போது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கான வேலை … Continue reading

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment