Monthly Archives: April 2015

கேகேகேயும் நானும்-4


கேகேகேயும் நானும்-4 ஏப்ரல் 30ம் தேதி.. அக்கினி நட்சத்திரம் அவசரமாக வந்து விட்டதாகத் தோன்றியது. ஒரே எண்ணுள்ள பேருந்துகள் ஒரே சமயத்தில் கிளம்பும் போது உட்கார இடம் இருப்பதைத் தேர்ந்தெடுத்து அதில் ஏறி அமர்வது சுறுசுறுப்பும் விறுவிறுப்புமாகக் காலைப் பொழுதைத் துவங்க உதவும். அந்த அனுபவத்துக்கான கவனத்தில் நான் இருந்த போது “என்னப்பா இன்னிக்கி சீக்கிரமே … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , , | Leave a comment

சூசகம்


சொல்வனம் 26.4.2015 இதழில் வெளியான கவிதை. சூசகம் மண்ணின் மடியில் அடைக்கலமான மழை நீர் விரவியதெங்கே வேர்கள் அறியும் வேர்களின் உயிர்ப்பும் கிரகிப்பும் தேடலும் அறியும் இலை பூ காய் மனிதன் வீழ்த்தியோ பருவ மாற்றமோ காற்றின் வீச்சோ இவை உதிரவும் மீண்டு வரவும் மீண்டும் மீண்டும் வரவும் அறியும் ஒவ்வொரு மீட்சியிலும் வெவ்வேறாய் வா … Continue reading

Posted in கவிதை | Tagged , | Leave a comment

அபிநயம்


(26.4.2015 puthu.thinnai.com இணைய இதழில் வெளியானது) அபிநயம் தோட்டக்காரர் கூட்டித் தள்ளும் சருகுகளூடே வாடிய பூக்கள் கணிசமுண்டு தோட்டத்துக் கனிச் சுவையில் காய் அதிருந்த பூ நினைவை நெருடா மாறாப் புன்னகை எப்போதும் எதையோ மறைக்கும் என்பதை விழிகள் உணரா புன்னகை விரிப்பைத் தாண்டி விழிகள் அடையா மலரின் மர்மம் ஏக்கம் மனக்குமிழ்களாய் கொப்பளிக்கும் மலர் … Continue reading

Posted in கவிதை | Tagged , | 1 Comment

கேகேகேயும் நானும்-3


கேகேகேயும் நானும்-3 எனக்குக் கார் சம்பந்தமாக இரண்டே இரண்டு விஷயங்கள் தான் தெரியும். கார் சாவியில் ஒரு பூட்டின் படம் பூட்டிய நிலையில் இருக்கும் அதை அழுத்தினால் கார் கதவுகள் மூடிக் கொள்ளும். ஒரு பூட்டின் கொக்கி மூஞ்சியைத் திருப்பிக் கொண்டிருப்பதைப் போல் ஒரு படம் இருக்கும். அதை அழுத்தினால் காரின் கதவுகள் திறக்கும். என் … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , , , | Leave a comment

கேகேகேயும் நானும்- 2


கேகேகேயும் நானும்- 2 காலையில் செய்தித்தாள் வாங்கும் கடையிலேயே சவரத்துக்கான ‘ப்ளேட்’ வாங்கிக் கொள்ளலாம் என்று நேற்று மாலை தள்ளிப் போட்ட வேலை காலையில் செய்தித்தாள் வாங்கும் போது மறந்து போனது. மறுபடி அதே கடைக்குப் போக வேண்டியது தான். கேகேகே தனது நடைப்பயிற்சியை முடித்து விட்டு வேர்க்க விறுவிறுக்கப் போய்க் கொண்டிருந்தான். என்னைக் கேள்விக் … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , , , | Leave a comment

கேகேகேயும் நானும் -1


கேகேகேயும் நானும் -1 “சிறிய கள் பெறுமின் எமக்கீயுமன்னே பெரிய கள் பெறுமின் பகிர்ந்துமன்னே” தமிழ் வாத்தியார் இதன் பொருளை விளக்கி மேலே செல்லவேயில்லை. அது இலக்கண வகுப்பு.” கள் குடிக்கிறது தப்பா சரியா ஐயா?” என்று எழுந்துவிட்டான் கேசவன். அவனது அப்பா பெயர் கா.கைலாசம். ஆங்கிலத்தில் அவன் KKK. ஆனால் வகுப்பில் அதற்கு வேறு … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , | Leave a comment

சென்னையில் ஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலி


19.4.2015 திண்ணை இதழில் வெளியானது. சென்னையில் ஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலி 18.4.2015 சனிக்கிழமை வடபழனி பேருந்து நிலையம் எதிரில் ஆர்கேவி அரங்கம் என்னும் “ப்ரிவியூ தியேட்டரில்” ஜெயகாந்தனுக்கு நினைவில் நிற்கும்படியான ஒரு அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் கேகே நகரின் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி. கவிதா பப்ளிகேஷன்ஸ் சொக்கலிங்கம் ஜெயகாந்தனின் சிறுகதைகளைத் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

குரூரமானவனின் படைப்பு வாசிக்கப் படலாமா? மதிக்கப் படலாமா?


குரூரமானவனின் படைப்பு வாசிக்கப் படலாமா? மதிக்கப் படலாமா? இந்த மாதிரி ஒரு கேள்விக்கு வாய்ப்பளித்தவர் குந்தர் கிராஸ் (Gunter Grass) . நோபல் பரிசு வென்ற இவர் தமது வாழ்நாள் முடிவில் தாம் நாசிப் படையில் கொலைச் செயல் செய்தவர்களில் ஒருவர் என்று ஒப்புக் கொண்டார். ஆரம்பத்தில் தாம் நாசிக்களை ஏற்கவே இல்லையென்றே கூறி வந்தார். … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | 2 Comments

ஜெயகாந்தன் பற்றி அ.மார்க்ஸ்


ஜெயகாந்தன் பற்றி அ.மார்க்ஸ் ஜெயகாந்தன் நினைவாக முதல் அஞ்சலிக் கூட்டம் சென்னையில் நேற்று டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் எஸ்.ராமகிருஷ்ணனால் நடத்தப்பட்டது. இணையதளம், ஆனந்த விகடன், தினமணி என அவருக்கு அஞ்சலி செலுத்துவோரின் பதிவுகள் நிறையவே வாசிக்கக் கிடைக்கின்றன. வருத்தம் என்னவென்றால் எல்லோரும் அவர் சபாவுக்குத் தான் போய்வந்த அனுபவம் மற்றும் அவருடன் தனிப்பட்ட முறையில் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | 1 Comment

ஜெயகாந்தன் – ஒரு மனிதன் ஒரு இலக்கியவாதி ஒரு உலகம்


ஜெயகாந்தன் – ஒரு மனிதன் ஒரு இலக்கியவாதி ஒரு உலகம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இணைய தளத்தில் பல எழுத்தாளர்கள் ஜெயகாந்தனுக்குச் செலுத்திய அஞ்சலிகளை வாசித்தேன். ஆனந்த விகடன் இதழில் பல பிரபலங்கள் மற்றும் எழுத்தாளர்களின் பேட்டிகள் கட்டுரைகளையும் படிக்கும் போது ஒன்று தெளிவானது. அனேகமாக வாசகராக நின்றே அனைவரும் தமது சோகத்தைப் பதிவு … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment