கி.ரா.வின் நினைவஞ்சலி


BSNL தமிழருவி, நெல்லை அமைப்பு எழுத்தாளர் கி.ரா.விற்காக நினைவஞ்சலிக் கூட்டத்தை BSNL இலக்கிய நண்பர்களை ஒருங்கிணைத்து நேற்று 21ஆம் தேதி நடத்தியது. பெருந்திரளாக கி.ரா.வின் வாசகர்கள் நிகழ்வில் பங்கு கொண்டது நிறைந்த மன நிறைவைத் தந்தது. கலந்து கொண்ட வாசகர்களில் கி.ரா.வின் நினைவைப் பகிர்ந்து கொள்ள விரும்பிய வாசக நண்பர்கள் அனைவருக்கும் நிகழ்வில் இடம் தந்தோம். BSNL தமிழருவி அமைப்பாளர் எழுத்தாளர் நண்பர் கோமதி சங்கர் வரவேற்புரையுடன் கி.ரா.வைக் குறித்தத் தனது நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார். நிகழ்வை நான் தொகுத்து வழங்கியதுடன் கி.ரா.அவர்களைக் குறித்த எனது நினைவுச் சித்திரத்தைப் பகிர்ந்து கொண்டேன்.தொடர்ந்து கி.ரா.வின் நினைவஞ்சலியில் கலந்து கொண்டு தங்களது இதயப் பூர்வமான நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட எழுத்தாளர்கள்/ வாசகர்கள் 1.எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் – திருப்பூர்2.எழுத்தாளர் பாவண்ணன் – பெங்களூர்3.எழுத்தாளர் சத்யானந்தன்( முரளிதரன்) – சென்னை 4.எழுத்தாளர் கவிஞர் சமயவேல் – மதுரை 5.எழுத்தாளர் எஸ்ஸார்சி( இராமச்சந்திரன்) – சென்னை6.எழுத்தாளர் அக்களூர் ரவி- சென்னை7.திருமிகு.பாப்பையா- திருநெல்வேலி 8.திருமிகு.ரூபினா ராஜ்குமார் – திருநெல்வேலி9.திருமிகு.சேகர் – சென்னை10.திருமிகு.சீனிவாசன்- நாகர்கோவில் 11.திருமிகு.அருண்ராஜா – நெல்லை12.திருமிகு.பிரசன்னா – கோவை 13.திருமிகு. உமா மஹேஸ்வரி கோபால்- சென்னைஉள்ளிட்ட பலரும் பேசினார்கள்.BSNL தோழர்கள்/நண்பர்கள் சுகுமாரன், பட்டாபி, விக்டர்ராஜு, ஈரோடு ஈஸ்வரன், கடலூர் பால்கி, மதுரை வா.நேரு, கோவை பழனிவேல்சாமி, நெல்லை துரைராஜ், UTK நெல்லை, KL.நாணு, பாரிஸ் தமிழ்சங்கம் சார்ந்த Kamalraj Rouvier , சுவடி நெல்லை, சுரேஷ் சுப்ரமணி உள்ளிட்ட ஏராளமானோர் நிகழ்வில் கலந்து கொண்டார்கள். நண்பர் Nallu R Lingam Zoom நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்தமைக்கு அன்பும், நன்றியும். நண்பர்கள் அனைவரும் காண வேண்டி நினைவஞ்சலியின் வீடியோ இரண்டு லிங்குகளாகத் தரப்பட்டுள்ளன. படைப்புகள் வழியாகஎழுத்தாளர் ‘நைனா’ கி.ரா. நம்மிடையே என்றும் வாழ்வார்

https://www.facebook.com/…/pcb…/580286639599745

https://www.facebook.com/…/pcb…/580287029599706

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment