Monthly Archives: October 2018

அஞ்சலி – ந. முத்துசாமி


தமிழ் நாடகம் பரிட்சைகள், புதுமைகள் மற்றும் செம்மைகளுடன் புதிய தடத்தில் கால் பதிக்க வைத்தவர் ந. முத்துசாமி. அவரது கூத்துப் பட்டறை அமைப்பின்  படுகளம் என்னும் நாடகத்தை நான் டெல்லி சங்கீத் நாடக அகாதமியில் வைத்துப் பார்த்தேன். அவரை  சந்தித்ததும் அப்போது மட்டுமே. அவருக்கு நாடகம் என்பதன் சாத்தியங்கள் பற்றிய புரிதல் மற்றும் அதில் புதியன … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , | Leave a comment

அஞ்சலி – சித்தன்


சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் நான் பணி புரிந்த அலுவலகத்துக்கு மிக அருகில் சித்தனின் யுகமாயினி வெளி வந்த சிறிய அலுவலகம் இருந்தது. அந்த இதழில் வந்த கம்யூனிசக் கோட்பாட்டை ஒட்டிய படைப்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. அவருடன் அடிக்கடி சந்திப்பும் நிகழ்ந்தது. அரிதாய் நான் யுகமாயினி இதழில் எழுதவும் செய்தேன். பழக மிக எளியவர். … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , , , | Leave a comment

போகன் சங்கருக்கு ஆத்மாநாம் நினைவு விருது.


20.10.18 அன்று மைலாப்பூரில் நடந்த ஆத்மாநாம் அறக்கட்டளையின் விருது வழங்கும் விழாவுக்குப் போயிருந்தேன். ஆத்மாநாம் நவீன கவிதை தமிழ் இலக்கியத்தில் உருப் பெரும் துவக்க காலத்தில் மிகப் பெரிய பாய்ச்சலுடன் எழுதியவர். அவர் எழுத்தும் வாழ்க்கையும் வெட்டிக் கொள்ளும் புள்ளி மீது சமரசமின்றி விசாரணை மேற் கொண்டவர். மனச் சோர்வு கவிஞர்களை என்றும் வாட்டுவது. அவரை … Continue reading

Posted in நாட் குறிப்பு, Uncategorized | Tagged , , | Leave a comment

வலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’


வலம் செப்டம்பர் 2018 இதழில் என் சிறுகதை ஒற்றைச் சிலம்பு வெளியாகி உள்ளது. வலம் இதழுக்கு என் நன்றிகள். கதையை இங்கே பகிர்கிறேன். ஒற்றைச் சிலம்பு – சிறுகதை –  சுருக்கமான அறிமுகம்   சிலப்பதிகாரத்தில் ‘மதுரைக் காண்டம் – கொலைக்களக் காதை’ க்கு முந்தையை சில நிகழ்வுகளே ‘ஒற்றைச் சிலம்பு’ கதை. வரலாற்றை மீள் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | Leave a comment

நவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி


15.9.2018 அன்று நவீன விருட்சம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ‘சினிமா அல்லது தொலைக் காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும், வாசிப்பின் மேன்மையும்’ என்னும் தலைப்பில் நான் ஆற்றிய உரை இரண்டு பகுதிகளாக யூடுயூப் இணையத்தில் உள்ளன. எனக்கு வாய்ப்பும் தந்து அதைக் காணொளியாக எடுத்து, இணையத்தில் பகிர்ந்த திரு. அழகிய சிங்கர் அவர்களுக்கு … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment