Monthly Archives: November 2014

காவியத் தலைவன் – மாறுவேடத்தில் வணிக சினிமா


காவியத் தலைவன் – மாறுவேடத்தில் வணிக சினிமா ஜெயமோகன் இணைய தளத்தில் குறிப்பிட்டது ஒரு காரணம் மறு காரணம் நாடகக் குழுக்கள் பற்றிய படம் என்பது. இந்த இரண்டு காரணங்களால் நான் காவியத்தலைவன் சினிமாவை பார்க்க முடிவு செய்தேன். தமிழ் சினிமாவில் இப்போது மிகவும் வித்தியாசமான படங்களின் காலம். எனவே 1935 – 1940 என்று … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , | Leave a comment

குஷ்புவின் மன உறுதி


குஷ்புவின் மன உறுதி இந்தக் கட்டுரை தமிழக அரசியல் பற்றியதே அல்ல. அதற்கு ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். தொலைக்காட்சிகள் வேறு இரவு எட்டு மணியானால் சாமியாட்டம் ஆடுகின்றன. இன்று தொலைக்காட்சிச் செய்தியில் பார்த்தேன். ஒரே மேடையில் குமரி அனந்தனுடன் குஷ்புவுக்கும் அவர் சேர்ந்த கட்சி இடம் அளித்தது குஷ்புவின் மன உறுதிக்குக் கிடைத்த கௌரவம். அவர் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

மதுவால் அழியும் தமிழன்- தமிழ் ஹிந்துவில் தொடர் கட்டுரை


மதுவால் அழியும் தமிழன்- தமிழ் ஹிந்துவில் தொடர் கட்டுரை “மெல்லத் தமிழன் இனி” என டி.எல். சஞ்சீவி குமார் ஒரு தொடர் கட்டுரையைத் ‘தமிழ் ஹிந்து’ நாளிதழில் எழுதி வருகிறார். மதுவின் பிடியில் தமிழக உழைப்பாளிகள் பெரும்பகுதி ஆனதால் அவர்கள் அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் உடல் நலம் இழப்பதில் தொடங்கி, குடும்ப வாழ்க்கையில் மனைவிக்கு உடல் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

முற்பகல் ஆயுத விற்பனை செய்யின்?


முற்பகல் ஆயுத விற்பனை செய்யின்? பிற்பகல் ஐஎஸ் ஐஎஸ் வரும் என்று தமது கட்டுரையில் பதிவு செய்கிறார் எச்.முஜீப் ரஹ்மான் தீராநதி நவம்பர் 2014 இதழில். ஈராக்கில் சதாம் ஹூஸைனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றாக பல குழுக்களுக்கு அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஆயுதங்களை விற்பனை செய்தன. சிரியாவில் 2011ல் பஷார் அசத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தின் போது … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

பேகம் சம்ரூ – ஜார்ஜ் தாமஸ் – வரலாற்றில் புதைந்தவர்கள்


பேகம் சம்ரூ – ஜார்ஜ் தாமஸ் – வரலாற்றில் புதைந்தவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரெஞ்சு, போர்த்துகீசியர், டட்சு மற்றும் ஆங்கிலேயப் பின்புலம் உள்ள போர்த்திறன் உடையவர்கள் பல கூலிப் படைகளாக உருவாகினர். அவர்கள் பல கண்டங்களில் பெரும் பணம் தேடிச் செல்பவர்கள். அவர்களில் ஒருவனே ஜார்ஜ் தாமஸ். அயர்லாந்திலிருந்து ஒரு கப்பல் ஊழியராக இந்தியா வந்தவர். … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

நவீனத் தமிழ்க் கவிதையில் செம்மொழிக் கூறுகள்- முருகேச பாண்டியன் கட்டுரை


நவீனத் தமிழ்க் கவிதையில் செம்மொழிக் கூறுகள்- முருகேச பாண்டியன் கட்டுரை உயிர்மை நவம்பர் 2014 இதழில், செம்மொழியான தமிழுக்கு உள்ள தனித்த சிறப்பியல்புகள் இவை என்று பாண்டியன் பட்டியலிடுகிறார்: 1.சங்கத் தமிழில் பல்வேறு இனக்குழுக்களின் பண்பாடு பற்றிய பதிவுகள்’ 2.இரண்டாயிரம் ஆண்டுளாகக் காலந்தோறும் காத்திரமான படைப்புகள் தொடர்ந்து வருகின்றன. 3.பண்பாட்டின் முக்கிய அடையாளமாக இலக்கியம் பல … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

நவீன கவிதை பற்றிய புரிதல் – யுவன் கட்டுரை


நவீன கவிதை பற்றிய புரிதல் – யுவன் கட்டுரை நவீன கவிதை பற்றிய புரிதல் ஒரு வாசகருக்கு அமைவது தான். கவிதைகள் மீது அவர் கொண்டிருக்கும் காதலைப் பொருத்தது அது. வாசிக்க, வாசிக்க ஒரு கவிதையின் பல பரிமாணங்கள் பிடிபடும். கவிதை எந்த சன்னலைத் திறக்கிறது எந்த உலகைக் காட்சியாக்குகிறது அல்லது எந்த தரிசனத்தின் ஒரு … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

சென்னை நோக்கியாத் தொழிற்சாலை மூடல்- அன்னிய முதலீட்டின் நிழல் முகம்


சென்னை நோக்கியாத் தொழிற்சாலை மூடல்- அன்னிய முதலீட்டின் நிழல் முகம் அக்டோபர் மாத இறுதியில் 8000 தொழிலாளர்கள் பணியிழக்க சென்னை நோக்கியாத் தொழிற்சாலை மூடப் பட்டது. நஷ்டம் காரணமாகவோ அல்லது தொழில் ரீதியான காரணங்களுக்காகவோ ஆட்குறைப்பு செய்வதோ இழுத்து மூடுவதோ அபூர்வமாக நடந்தால் நாம் புரிந்து கொண்டே தீர வேண்டும். ஆனால் நிலம் முதல் மின்சாரம் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged | Leave a comment

அனாரின் மூன்று கவிதைகள்


அனாரின் மூன்று கவிதைகள் காலச்சுவடு நவம்பர் 2014 இதழில் அனார் அவர்களின் மூன்று கவிதைகள் வந்துள்ளன. நவீனக் கவிதை என்பது என்ன? அதன் சாத்தியங்கள் என்ன? இந்தக் கேள்விகளுக்கான விடைகளுக்கு எல்லையே கிடையாது. கவித்துவமும், கற்பனையும் வார்தைப் பின்னல்களாலும் தட்டையான சித்தரிப்புகளாலும் ஒரு கவிஞனின் தரிசனங்கள் வெளிப்பட இயலவே இயலாது. துண்டு துண்டாகத் தென்படும் தூரிகைத் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | Leave a comment

குழந்தைத் தொழிலாளிகளில் அனேகர் கடத்தப் பட்டவரே


குழந்தைத் தொழிலாளிகளில் அனேகர் கடத்தப் பட்டவரே சுகிதா அமைதிக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி பற்றிய விரிவான கட்டுரையை “தளிர்களின் காவலன் ” என்னும் தலைப்பில் உயிர்மை 2014 இதழில் எழுதியிருக்கிறார். கால்பந்து தயாரிப்பு முதல், தரை விரிப்பு, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, கண்ணாடி வளையல்கள், பட்டாசுகள் ,கல் குவாரிகள் என குழந்தைத் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , | Leave a comment