Category Archives: சிறுவர் இலக்கியம்

கார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது


கார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது. நோஷன் பிரஸ் வெளியீடாக வந்திருக்கிறது. சுவாரசியமான மாயாஜாலக் கதை. குழந்தைகள் பெற்றோர் கண்காணிப்பில்லாமல் ஸ்மார்ட்போன் பயன்படுத்தலாமா என்னும் கேள்வியை விரிவாக விவாதிக்கும் குழந்தைகள் புத்தகம் இது. நோஷன் பிரஸ்ஸில் வாங்க இணைப்பு ———————– இது. அமேசான் கிண்டில் மின்னூலுக்கு இணைப்பு —————-இது.

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged | Leave a comment

Kindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்


நாவல் தமிழில் – அதற்கான இணைப்பு நாவல் ஆங்கிலத்தில் – அதற்கான இணைப்பு மேஜிக் சைக்கிளா? சைக்கிளுக்கு எப்படி மாயசக்தி வரும்? வந்தால் அது மாய சக்திகளை வைத்து என்னென்ன செய்யும்? கார்த்திக் தன் மாஜிக் சைக்கிளை வைத்துக் கொண்டு என்ன செய்தான்? விறுவிறுப்பான மாய மந்திரம் நிறைந்த இந்தக் கதையை படித்த இரு சிறுவர்கள் ‘சூப்பர்’ என்றார்கள். வாசித்துப் பாருங்கள்!  

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged , , | Leave a comment

கோமல் – குறும்படம்- தவறான தொடுகை பற்றி குழந்தைகளுக்கு விளக்கும்


கோமல் – குறும்படம்- தவறான தொடுகை பற்றி குழந்தைகளுக்கு விளக்கும் Child Line India என்னும் அமைப்பு குழந்தைகளுக்காக உருவாக்கி இருக்கும் கோமல் என்னும் குறும்படம் 1. தவறான தொடுகை எது? 2. எந்தெந்த இடங்கள் பிறர் தொடக் கூடாதவை, 3. பாலியல் ரீதியான அணுக்கம் காட்டுவது என்பது எது? 4. நம்மிடம் ஒருவர் அத்துமீறினால் … Continue reading

Posted in காணொளி, சினிமா விமர்சனம்., சிறுவர் இலக்கியம் | Tagged , | Leave a comment

ஒற்றுமையின் பலம் – குழந்தைகளுக்கான காணொளி


ஒற்றுமையின் பலம் – குழந்தைகளுக்கான காணொளி இரண்டு காரணங்கள் இந்தக் காணொளியைப் பகிர – 1. குழந்தைகளுக்கு எளிதாகப் புரியும்படி ஒற்றுமையைச் சித்தரித்திருக்கிறார்கள். 2. நல்ல தொழில் நுட்பம். குழந்தைகளை இது ஒரு கணிப்பொறி விளையாட்டுப்போல ஈர்க்கும். பகிர்ந்த வாட்ஸ் ஆப் நண்பர்களுக்கு நன்றி.

Posted in காணொளி, சிறுவர் இலக்கியம் | Tagged | Leave a comment

மகிழ்ச்சி எது?- குழந்தைகளுக்கான குறும்படம்


மகிழ்ச்சி எது?- குழந்தைகளுக்கான குறும்படம் குறும்படத்துக்கான இணைப்பு————> இது வணிகவியல், மேலாண்மைப் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு முக்கியமான ஒரு பாடம் “குழுமத்தின் சமூகப் பொறுப்பு” -(Corporate Social Responsibility). பல ‘கார்ப்பொரேட் நிறுவனங்கள் இதைப் பெயரளிவிலேயே செய்கின்றன. ஒப்புக்கும் ஊடகத்தில் வருவதற்குமான சிறிய பணிகள் அவை. உதாரணத்துக்கு ஒரு அரசு மருத்துவமனைக்கு சிறிய உபகரணத்தை வழங்குவது போன்றவை. … Continue reading

Posted in காணொளி, சினிமா விமர்சனம்., சிறுவர் இலக்கியம் | Tagged | Leave a comment

முதலை – My friend the Crocodile திரைப்படம் – குழந்தைகள் காண வேண்டிய படம்


முதலை – My friend the Crocodile திரைப்படம் – குழந்தைகள் காண வேண்டிய படம் மக்கள் தொலைக்காட்சியின் நேற்று முதலை என்னும் தமிழ்ப் படத்தைப் பார்த்து மிகவும் வியந்தேன். சுற்றுச் சூழலை நேசிக்கும், பல்வேறு உயிரினங்களை நேசிக்கும் ஒரு சிறுவனை மையப்படுத்தி மிகவும் இயல்பாக எடுக்கப்பட்ட அருமையான படம். 1988 வந்த இந்தப் படம் … Continue reading

Posted in சினிமா விமர்சனம்., சிறுவர் இலக்கியம் | Tagged | 1 Comment

குழந்தைகளுக்கான கன்னட நகைச்சுவைக் கதை


குழந்தைகளுக்கான கன்னட நகைச்சுவைக் கதை ஒரு கழுதையை மையப் படுத்தி யோகேஷ் மாஸ்டர் கன்னடத்தில் எழுதிய “நிழலுக்கு வாடகை” என்னும் சிறுகதையை இறையடியான் திசை எட்டும் ஏப்ரல்-ஜூன் 2015 இதழில் மொழிபெயர்த்திருக்கிறார். குண்டண்ணா எதையெடுத்தாலும் துருவித் துருவிக் கேள்வி கேட்டுத் துளைத்து எடுப்பவன். ஒரு நாள் இரவு உணவு விடுதி மூடும் நேரம். அவன் நுழைந்ததும் … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged | Leave a comment

ஆந்தை பூதம்- ஜெர்மானியக் கதை


ஆந்தை பூதம்- ஜெர்மானியக் கதை சைதன்யா என்னும் குழந்தையின் எழுத்துத் திறன் பற்றி ஏற்கனவே நான் குறிப்பிட்டேன். திசை எட்டும் ஏப்ரல் ஜூன் 2015 இதழில் “திருமதி ஆந்தை” என்னும் குழந்தைகளுக்கான ஜெர்மானியக் கதையை மொழி பெயர்த்திருக்கிறார். ஜெகப்க்ரிம், வில்ஹெல்க்ரிம் என்னும் இரண்டு சகோதரர்கள் தாம் செவி வழிக் கேட்ட கதைகளைத் தொகுத்து Grimm’s Fairy … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged , , | Leave a comment

பச்சோந்தியின் குழப்பம்- எரிக் கார்லே கதை


24.6.2015 தமிழ் ஹிந்துவில் எரிக் கார்லேயின் “குழம்பித்தவித்த பச்சோந்தி” என்னும் குழந்தைகளுக்கான சிறுகதை சுவாரசியமான வாசிப்பைத் தந்தது. கதை எப்படி சுவையாகச் சொல்லப்பட்டிருக்கிறது? பச்சோந்தி தான் இலைகளோடு இருந்தால் பச்சை நிறமாகும், மரத்தின் அடியில் இருந்தால் மரத்தின் நிறமாகும். இப்படியாகப் பார்ப்பவர்களே குழம்பிப் போவார்கள் இல்லையா? ஆனால் குழப்பும் பச்சோந்தி எப்படித் தானே குழம்பியது? ஒரு … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged , | Leave a comment

குழந்தை எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் சைதன்யா


குழந்தை எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் சைதன்யா ஆறாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவி எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுவர்களுக்கான கதை நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். “ஒரு தங்க நாணயம்’ என்னும் ஆப்கானிஸ்தானக் கதையை தமிழில் “திசை எட்டும்” -ஏப்ரல்-ஜூன் 2015 இதழில் சைதன்யா தந்திருக்கிறார். சரளமான பிழையற்ற தமிழ். 2013க்கான திசை எட்டும் விருதைப் பெற்றிருக்கிறார். தங்க நாணயம் கதை … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged , | Leave a comment