Monthly Archives: July 2015

கலாம் மீது கடுமையான​ விமர்சனம்- ஜெயமோகன் பதில்


கலாம் மீது கடுமையான​ விமர்சனம்- ஜெயமோகன் பதில் யாருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்லர். என்றாலும் ஒருவருக்கு – நாட்டையும் மக்களையும் அப்பழுக்கில்லாமல் நேசித்த​ ஒரு மாமனிதருக்கு- நாடே அஞ்சலி செலுத்தும் போது , அவரை விமர்சிப்பது நல்ல​ பண்புமிகு செயல் அல்ல​. சாருநிவேதிதா கட்டுரையை வாசித்த போது நான் மிகவும் வருந்தினேன். ஆனால் எதிர்வினை ஆற்றும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

துளி விஷம்


துளி விஷம் சத்யானந்தன் பரிமாற்றங்களின் தராசில் ஏறுமாறாய் ஏதேனும் மீதம் இருந்து விடுகிறது நாட்காட்டியின் தாள்கள் திரைகளாய் அபூர்வமாய் நினைவின் பனிப் பெட்டகத்தில் உறைந்து போயிருந்த முகம் எப்போதோ எதிர்ப்படுகிறது எந்தத் தழும்பில் அந்தப் பரிச்சயம் இழையோடுகிறது என்றறிய வெகுகாலம் பிடிக்கிறது பகலின் பரிகாச முகங்கள் இரவில் ரத்தக் காட்டேரிக் கனவுகளாகின்றன மீறல்கள் வம்புச் சண்டைகள் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

பிஞ்சு மனதை அவமானத்தால் ஊனப்படுத்தாதீர்- தமிழ் ஹிந்துவில் கட்டுரை


பிஞ்சு மனதை அவமானத்தால் ஊனப்படுத்தாதீர்- தமிழ் ஹிந்துவில் கட்டுரை 30.7.2015 தமிழ் ஹிந்து நாளிதழில் “ஒவ்வோர் அவமதிப்பும் ஒரு மரணம்” என்னும் கட்டுரை வாசகர்களின் சிந்தனைக்காக முன் வைக்கப் பட்டது. ஆனால் சமுதாயம் குழந்தைகள் விஷயத்தில் தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும். நாம் குழந்தைகளுக்கு குடும்பத்தில், பொது இடங்களில், கல்வி நிறுவனங்களில் தரும் இடம் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

தன் குடும்பப் பெரியவரை இழந்த சோகம் தமிழகமெங்கும்


தன் குடும்பப் பெரியவரை இழந்த சோகம் தமிழகமெங்கும் பள்ளிக்கூடங்களில் மட்டுமல்ல தெருமுனைகள் பலவற்றில் அமரர் அப்துல் கலாம் அவர்களின் புகைப்படங்களுக்கு அஞ்சலியை என்னால் காண முடிந்தது. சிறு சிறு கடைகளில் கூட அவருடைய புகைப்படங்கள் அஞ்சலிக்காக இருந்தன. ஒரு கடைக்காரர் ஒரு நாளிதழில் வந்திருந்த பெரிய புகைப்படத்தை அப்படியே கடையின் சுவரில் ஒட்டி இருந்தார். அப்துல் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

அப்துல் கலாம் – அறிவியலும் மானுடம் முழுமைக்குமான கனவுகளும் ஆன பெருவாழ்வு


அப்துல் கலாம் – அறிவியலும் மானுடம் முழுமைக்குமான கனவுகளும் ஆன பெருவாழ்வு கிராமப்புறத்தில் தமிழ் வழியில் கல்வி கற்ற ஒருவர் இந்தியா செயற்கைக் கோள்களை அனுப்பும் “ராக்கெட்” தொழில் நுட்பத்தில் தன்னிறைவு காண்பதை உறுதி செய்யும் அளவு உயர்ந்தார். விஞ்ஞானியாக இருந்த போதும் குடியரசுத் தலைவராக உயர்ந்த போதும் அவருக்கு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் மானுடத்துக்குமான … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

பொ. கருணாகரமூர்த்தி சிறுகதை “சாதல் என்பது”


பொ. கருணாகரமூர்த்தி சிறுகதை “சாதல் என்பது” “பழைய கூத்திக்கு அப்பப்ப மணியோடர் அனுப்பினதும் போதாதெண்டு சொத்தில ஒரு பகுதியை தானம் கொடுத்த தர்மப்பிரபு, இன்னொரு பகுதியை அசுக்கிடாமல் உறவுகொண்டாடினவைக்கு வார்த்துவிட்டவர், மிச்சமிருக்கிறதை உருவிப்போக நோட்டும் கையுமாய் நிக்கிறா ஒரு உடன்பிறப்பு.” மாதினி அதை யாருக்குச் சொல்கிறாள் என்று தெரியவில்லை. காலச்சுவடு ஜூலை 2015 இதழில் வெளி … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | Leave a comment

தொலைக்காட்சிகளின் வணிக நோக்கைக் கண்டிக்கும் இமையத்தின் சிறுகதை “வற்றாத ஊற்று”


தொலைக்காட்சிகளின் வணிக நோக்கைக் கண்டிக்கும் இமையத்தின் சிறுகதை “வற்றாத ஊற்று” உயிர்மை ஜூலை 2015 இதழில் இமையத்தின் சிறுகதை “வற்றாத ஊற்று” முழுக்க முழுக்க தொலைக்காட்சிகளைத் தாக்குகிறது. பரபரப்பு மற்றும் வெகுஜென கவனிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மட்டுமே தொலைக்காட்சிகள் செயற்படுவதாக அழுத்தம் திருத்தமாக ஒரு சிறுகதை பேச வேண்டும் என்று இமையம் விரும்பி இருப்பது … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

இமயமலையின் உறைபனி எல்லைப்புறம் பற்றி Frozen – ஹிந்தி திரைப்படம்


இமயமலையின் உறைபனி எல்லைப்புறம் பற்றி Frozen – ஹிந்தி திரைப்படம் 70களில் டான்னி டெங்ஜோங்க்பா அனேகமாக எல்லா ஹிந்திப்படங்களின் வில்லன். ப்ரோஸன் என்னும் ஹிந்திப்படம் 2007ல் எடுக்கப் பட்டது. அதில் அவரை ஒரு சராசரி மலைவாசித் தகப்பனாகக் காணும் போது தொடர்ந்து பார்க்கத் தோன்றியது. டிடி பாரதி தொலைக்காட்சியில் 25.7.2015 அன்று ஒளிபரப்பானது. வழக்கம் போல … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged | Leave a comment

வாஸந்தியின் சிறுகதை “கருவறையின் ஓலம்”


வாஸந்தியின் சிறுகதை “கருவறையின் ஓலம்” என்றும் மீளாத் துயராக​ ஆழ்மனதில் நீள்வது புத்திர​ சோகம். ​ படைப்புகள் இந்தத் துயரை மையமாக​ வைத்து நிறையவே வந்திருக்கின்றன​. ஒவ்வொரு படைப்பும் அந்த​ சோகத்தின் மற்றொரு பரிமாணத்தை நம் முன் நிறுத்துகிறது. ஒரு தாய் பல​ ஆண்டுகளுக்கு முன் தான் பிள்ளையைப் பறி கொடுத்த​ சோகம் மீண்டும் புதிய​ … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

குழந்தைகள் கடத்தலைத் தடுக்கும் ரயில்வே துறையின் நடவடிக்கை


குழந்தைகள் கடத்தலைத் தடுக்கும் ரயில்வே துறையின் நடவடிக்கை “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” 24.7.2015 நாளிதழில் “சைல்ட் லைன்” என்னும் தன்னார்வ​ அமைப்பு எழும்பூர் ரயில் நிலையத்தில் கடந்த​ மூன்று வாரங்களில் 40 குழந்தைகளை மீட்டிருப்பது செய்தி. குழந்தைகள் மீட்கப் பட்டது மகிழ்ச்சி அளித்தாலும் வாரத்துக்கு பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமற் போகிறார்கள் என்பது மிகவும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment