Monthly Archives: August 2012

எதையும் தாங்கும் இதயம்


எதையும் தாங்கும் இதயம் எதையும் தாங்கும் இதயம் தங்களுக்கு உண்டு என்று தமிழர்கள் எத்தனையோ விதங்களில் நிரூபித்திருக்கிறார்கள். அலகாபாதில் ஒரு ஏழை, தள்ளு வண்டியில் காய்கறி விற்பவர் அதை போலீஸ் காரர் மாமூல் தராத குற்றத்திற்காக தன் நெஞ்சின் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றிய போது நிஜமாகவே நிரூபித்திருக்கிறார். அந்த காவல்துறை ஊழியருக்கு தொழில் நுட்ப … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

தூக்கு தண்டனையை விடக் கடுமையான தண்டனை


தூக்கு தண்டனையை விடக் கடுமையான தண்டனை மரணத்தை விடக் கொடுமையானது மரணபயம். ஒரு வருடம் தனிமைச் சிறையில் ஒரு கைதியை வைத்துப் பிறகு உனக்கு தூக்கு தண்டனை தரலாமா அல்லது வாழ் நாள் முழுவதும் இதே தனிமைச் சிறைதான் என்றால் உடனடியாகத் தூக்கில் இடுங்கள் என்பான். சமுதாயத்தில் எளியோரை பெண்களை தாழ்த்தப் பட்டோரை மற்றும் அனைவரையுமே … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment

ஆவணம் – கவிதை


கவிதை ஆவணம் சத்யானந்தன் காலமாவது காலாவதியாவது பற்றிய கேள்வி முட்கள் நகர செருப்புக்களை ஊடுருவ முந்தும் வாகன முகப்பு விளக்கு சமிக்ஞை மின்சாரத் தடை விரித்த இருள் வெளி காட்டும் மெழுகு தீப வெளிச்சக் கூச்சம் உள்வாங்கி இணையும் இமைகள் கனவுக்கு ஒளியூட்டும் ஆவணம் ஆக்காமல்

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment

அது -கவிதை


கவிதை அது சத்யானந்தன் அவ்வசைவு அடி வயிற்றுள் பிஞ்சு விரல் நகர்வு மௌன நீர்ப்பரப்பின் மீதொரு சிறகடிப்பு மொட்டவிழும் பூ பனிக்கட்டி நீராகும் பரிணாமம் போலில்லை இரண்டு நிமிடம் இடைவெளி விட்டாலும் வாசித்ததை பறிக்கும் எதிர் இருக்கைப் பயணிக்குச் சேர்க்க முடியாமற் போன எதிர்வினை

Posted in கவிதை | Tagged , , , , , , , , | Leave a comment

இருக்கை மொழி – கவிதை


கவிதை இருக்கை மொழி சத்யானந்தன் வந்தவுடன் குரல் கொடுக்கும் நீத்தார் பிரதி நிதி காகம் பாத்திரத்தைத் தள்ளி ஓசைப் படுத்தும் பூனையல்ல உன் வருகை மௌனம் போர்த்திய் உள் ஓலங்கள் அழைப்பு மணி ஓசைக்குள் பொதிந்திருக்கும் உன் செலவாணி என்னிடம் இல்லை எனக்கு அன்னியமாயும் இருக்கலாம் அவசரமாய் அணிந்த மேலங்கி ஒன்றே எனக்கு ஆசுவாசம் அழைப்பு … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , , | Leave a comment

கவிதை -காது வருடி


கவிதை காது வருடி சத்யானந்தன் புத்தகத்தை இரவல் கொடுத்தது இன்னொரு படைப்பாளிக்குச் செய்த துரோகமோ? அவன் திருப்பித் தந்த போது பக்க அடையாள அட்டை உடன் வரவில்லை அவன் பேசியபோது படைப்பாளியைக் குதறிய நகங்கள் சீண்டியதாகத் தென்படவில்லை முனை மழுங்கடிக்கப்பட்ட குச்சம் பொருத்தி இதமாய் காதுக்குள் வருடும் சொல்லாடலில் இருந்தான்

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment

எலிகளின் சுதந்திரமும் எளியோரின் கையறு நிலையும்


எலிகளின் சுதந்திரமும் எளியோரின் கையறு நிலையும் சென்னை திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் எலி குதறிய நிலையில் பிறந்து சில நாட்களே ஆன சிசுவின் உடல் பெற்றோரிடம் கொடுக்கப் பட அப்போது எலி குதறி குழந்தை இறந்ததோ என பெற்றோர் தமது சோகத்தையும் கோபத்தையும் வெளிப் படுத்தினர். அன்று நிர்வாகம் கையில் எடுத்துக் கொண்ட கேள்வி ஒன்றே … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

11வது இடம்


11வது இடம் இந்தியாவுக்கு 11வது இடம் ஒலிம்பிக்ஸில் கிடைத்திருந்தால்? எவ்வளவு பெருமையாக இருக்கும்? ஆனால் தனது நாட்டுக்குள்ளேயே அகதியாக ஆக்கப்பட்டோர் மக்கட்தொகையில் 11வது இடம்!  இது NRC (Norwegian Regugee Council) என்னும் நிறுவனம் Genevaன் உலக நாட்டு அமைப்பான  IDMC (Internal Displacement Monitoring Centre)ன் கணக்கெடுப்பில் வெளியான தகவல்.  கொலம்பியா, ஈராக், சூடான், … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment

சுருதி – கவிதை


கவிதை சுருதி சத்யானந்தன் வீட்டின் மூலையில் காற்றைக் கிழித்துப் பெருமிதமாய்ச் சுழன்ற சிலம்பத்தின் மீது சிலந்தி வலை மரணக் கிணற்றிலிருந்து வெளிப்பட்ட பாதாளக் கரண்டியிலிருந்து ஒரு தவளை தாவி நிலம் பற்றுகிறது சுருதி சேர்ந்த தந்திகள் மௌனம் பூண்ட வீணை இருக்கும் அறையில் ஒரு வண்டின் ரீங்காரம்

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment

படிகள் – கவிதை


கவிதை படிகள் சத்யானந்தன் காற்றின் சிறகுகளைப் பற்றி எரிக்கும் நெருப்பு மரத்தின் கனவுகள் ஒளிரும் முகப்பு விளக்குகளில் தூசிகளை உதாசீனம் செய்யும் வாகனங்கள் விரைந்திட நேற்றைய உணவும் விலை போகும் சந்தையில் ஒரு குழந்தை தாய்ப் பாலில் பசியாறிக் கொண்டிருந்தது உறைகல்லில் மட்டும் தங்கமாய் வெளிப்படும் மௌனங்கள் சறுக்கு மரத்தில் ஏணிப்படிகளாய்

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment