ஒரு சிறிய சாதனை
நான் தங்கியிருக்கும் என் மகள் வீட்டில் இருந்து மூன்று கிமி சுமார் இருக்கும் சன்னிவேல் நூலகம். நேற்றைக்கு முதல் நாள் அவர் என்னை நடையாய் அழைத்துச் சென்று காட்டினார் என்பது உண்மையே. ஆனாலும் நான் வாஷிங்க்டன் என்னும் சாலை சந்திப்பில் சாலையைக் கடந்து நேர் எதிர்ப்புறம் செல்லாமல், வந்த வழியிலேயே மேற் சென்று விட்டேன். பந்தாவாக ‘கூகுள் மேப்ஸ்’ போட்டால் எனக்கு அதை வைத்து மேலே போவதில் குழப்பங்கள் நீங்கவில்லை. தள்ளு வண்டியில் குழந்தையுடன் ஒரு அமெரிக்க இளம் பெண் எனக்கு சரியான திசை காட்ட நான் அதன் பின் நூலகத்தைக் கண்டு பிடித்து விட்டேன். திடீரெனெப் பேசினாலோ வழி கேட்டாலோ அவர்கள் முகம் சுளிப்பதில்லை. சென்ற முறை விஜயத்தின் போது நான் குறிப்பிட்டது போல அவர்கள் காலை வணக்கம் அல்லது புன்னகையை இயல்பாகவே எதிர்ப்படுவோருடன் பரிமாறிக் கொள்வார்கள். இந்த சாதனையின் களிப்பில் ஒரு செல்ஃபி வேறு எடுத்தேன். அந்தப் புகைப்படமே இது.