கலிபோர்னியா -மரத்தை ஊடுருவும் மின் கம்பிகள்
சென்ற முறை வந்த போது எழுதிய பதிவுகளில் குறிப்பிட்டிருந்த படி தலைக்கு மேல் செல்லும் மின் கம்பிகள் எனக்கு வியப்பையே அளிக்கின்றன. சென்னையில் நகரத்தின் எல்லாத் தடங்களிலும் தரைக்குக் கீழேதான் மின் கம்பிகள். இங்கே மின் கம்பிகளின் வழியில் மரம் வந்தால் அதை ஊடுருவிச் செல்லும் படி மின் கம்பிகளை அமைக்கிறார்கள். நம் ஊரில் அனேகமாக முழு மரத்தையோ அல்லது பகுதி மரத்தையோ வெட்டி வீசி விடுவார்கள். ஒரு தெரு முழுவதும் இப்படி மின் கம்பிகள் அமைக்கப் பட்டிருப்பதை கவனித்தேன். மொத்த மக்கட் தொகையும் குறைவு. மிகவும் வசதியானவர் எண்ணிக்கையும் குறைவே. அதனால் பல இடங்களில் தனி வீடுகள் தோட்டங்களுடன் காணக் கிடைக்கின்றன. அரசும் மரங்களை வெட்டாததால் நல்ல பசுமை.