இயற்கை வளத்தை ஏழைகள் தான் காப்பாற்றுகிறார்கள்


இயற்கை வளத்தை ஏழைகள் தான் காப்பாற்றுகிறார்கள்

ஏழைகளை யார் காப்பாற்றுகிறார்கள்? அவர்களுக்காக யார் பாடுபடுவார்கள்? என்னும் கேள்விகளுக்கு விடை கிடையாது. ஆனால் இயற்கை வளத்தைப் பேணுவதில் ஏழைகள் பெரும் பணி ஆற்றுகிறார்கள். இயற்கை வளம் அழியும் போது அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது. விறகு மற்றும் மரத் துண்டுகளைத் தவிர்த்து காட்டு வளத்தை நம்பித்தான் பாதிக்கும் மேற்பட்ட ஏழைகளின் வாழ்வாதாரம் இருக்கிறது. ஒடிஸாவின் குண்ட்லபா என்னும் கடலோர கிராமத்தின் மாந்தோப்புகள், மற்றும் தென்னந்தோப்புகள் 1999 அடித்த பயங்கரமான புயலில் முற்றிலுமாக அழிந்து விட்டன. கிராமத்துப் பெண்கள் இணைந்து காட்டைப் பாதுகாக்கும் பெண்கள் குழு என்னும் அமைப்பை ஏற்படுத்தி கடந்த 13 வருடங்களில் முக்கால் வாசி காடுகளை மீண்டும் வளர்த்து விட்டார்கள். காடுகளில் இருந்து கிடைக்கும் வருமானமும் கூடி இருக்கிறது. மீனும் ஒரு குடும்பத்துக்கு சராசரி ஒரு கிலோ கிடைத்தது ஐந்து கிலோ என்னும் அளவு உயர்ந்திருக்கிறது.  Convention of Biological Diversity என்னும் உலக அளவிலான மாநாடு ஹைதராபாதில் தற்போது நடக்கிறது. இதில் வெவ்வேறு தாவரங்கள் மற்றும் உயிரனங்களைப் பேணுவதில் சமூகத்தில் எல்லாப் பிரிவு மக்களையும் ஈடுபடுத்துவதால் அவர்களது வருமானம் உயர்ந்ததுடன் இயற்கை வளங்களையும் பெருக்க இயல்வது சுட்டிக் காட்டப் பட்டது. UNDP (United Nations Development Program) என்னும் திட்டத்தில் மன்னார் வளைகுடாவில் பவளப் பாறைகளைக் காக்கும் திட்டம் செயற்படுத்தப் பட்டபோது இது கண்கூடாக நிரூபணம் ஆனது. (நன்றி ஹிந்து)

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , , , , . Bookmark the permalink.

Leave a comment